undefined

பெரும் சோகம்...  விடுதியில் கல்லூரி மாணவி சடலமாக மீட்பு!

 


 
மத்தியப் பிரதேசத்தில் இந்தூரில் படித்து வந்த கல்லூரி மாணவி விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  குவாலியரில் வசித்து வருபவர்  காஷிஷ் பத்வானி. இவர் இந்தூரில் கடந்த 2 ஆண்டுகளாக இளங்கலைப் பட்டப்படிப்பு    விடுதியில் தங்கிப் படித்துவந்தார். இந்நிலையில் அவர்  குளியலறைக்கு வெளியே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.


உடன் தங்கியிருந்த மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவம் நடந்த விடுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் குறித்து  கல்லூரி மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, உடலை பிரேதப் பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பத்வானி நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியார் விடுதியில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .  


விசாரணையின் போது, பத்வானி மனமுடைந்த நிலையில் கடந்த 2 நாள்களாக யாரிடமும் பேசாமல் இருந்ததாகவும், எந்த பிரச்னையையும் அவர் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனவும் உடன் தங்கியிருந்த  விடுதி மாணவிகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அவரது மொபைல் போனின் அழைப்பு பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாணவி உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியவில்லை.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!