undefined

அட்மிஷன் மறுக்கப்பட்ட திருநங்கை மாணவிக்கு கடவுள் போல் உதவிய கல்லூரி நிர்வாகம்.. நெகிழ்ச்சி பின்னணி!

 

கோவை சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் அஜிதா என்ற திருநங்கை மாணவி. அஜிதா தனது 12 வது தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து, தனது மேற்படிப்புக்காக பல கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளார். பல இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார். மனிதவியல் பிரிவில் 373/600 மதிப்பெண்கள் பெற்று, உளவியல் படிக்க விரும்பி, கோவையில் உள்ள தனது கனவுக் கல்லூரியை அணுகியுள்ளார். அவர் தனது தாயுடன் அங்கு சென்றார்.

ஆனால், அங்கு திருநங்கைகளுக்கு கல்விச்சேர்க்கை இல்லை என்றும், அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்றும் கேட்டுள்ளனர். மேலும், அவர் எந்த கழிவறையை பயன்படுத்துவார் என கேட்டு மாணவியை காயப்படுத்தியுள்ளனர். கல்லூரியில் இடம் கொடுக்க முடியாது என வாய்ப்பை மறுத்துவிட்டனர். இந்தச் செய்தியைத் தொடர்ந்து அஜிதாவுக்கு கோவை கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது.

அஜிதாவின் கல்விச் செலவை முழுவதுமாக  ஏற்பதாகும், மூன்று வருடங்கள் இலவசக் கல்வி கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். திருநங்கையான பத்மினி பிரகாஷ் ஏற்கனவே கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், முன்னதாக அஜிதாவுக்கு வாய்ப்பை மறுத்த கல்லூரி நிர்வாகம், அஜிதாவை அழைத்து மன்னிப்பு கேட்டது. இதுகுறித்து அஜிதா கூறும்போது, ``இதுபோன்ற புறக்கணிப்பால் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோருகிறோம். நான் இப்போது சேர்ந்திருக்கும் கல்லூரியில் என்னை நன்று வரவேற்றார்கள். மகிழ்ச்சியாக உள்ளேன்,'' என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!