கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை... ரயில்களில் அடுதடுத்து 4 கொலைகள்... வல்சாத் சீரியல் கில்லர் கைது!
வல்சாத் இளம்பெண் கற்பழிப்புகுற்றவாளி நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர். ரயிலில் பயணித்த 4 பெண்களைக் கொலைச் செய்த பிரபல சீரியல் கில்லர் வல்சாத் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா போன்ற மாநிலங்கள் வழியாகச் செல்லும் ரயில்களில் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் வல்சாத் மாவட்டத்தில் உள்ள உத்வாடாவில் உள்ள மாந்தோப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவியின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை சம்பவத்தில் இந்த கொலை, ஒரு சீரியல் கில்லரின் வேலை என்று உறுதிசெய்யப்பட்டது.
கடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த பல்வேறு ரயில்களில் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலைச் செய்துள்ளார். ரயிலில் இப்படி 4 பேரைக் கொலைச் செய்துள்ளது தெரிய வந்துள்ளதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.நேற்று நவம்பர் 25ம் தேதி காலை தெலுங்கானாவின் செகந்திராபாத் வழியாகச் சென்ற ரயிலுக்குள் பெண் ஒருவர் கொல்லப்பட்டது சமீபத்திய கொலை என்று போலீசார் தெரிவித்தனர் .
குற்றம் சாட்டப்பட்டவர், ஹரியானாவின் ரோஹ்தக்கில் வசிக்கும் 30 வயதான ராகுல் என்ற போலு கரம்வீர் ஜாட். நேற்று மாலை மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறி வாபி ரயில் நிலையத்தில் இறங்கிய போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 20ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை கர்நாடகா , மகாராஷ்டிரா , மேற்கு வங்காளம் , தெலுங்கானா போன்ற மாநிலங்கள் வழியாகச் செல்லும் ரயில்களில் இந்தக் கொலைகள் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர் .
நவம்பர் 14ம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் உத்வாடாவுக்குப் பணியாளராகப் பணியாற்றிய ஒரு ஹோட்டலில் இருந்து பணம் பெற வந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவர் வாபிக்கு அழைத்துச் செல்ல உள்ளூர் ரயிலுக்காகக் காத்திருந்தார். அங்கிருந்து மும்பைக்கு செல்லவிருந்தார். அப்போது ரயில்வே பிளாட்பாரத்தில் இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுக் கொண்டிருந்ததைக் கண்டார். உடனே அவளைப் பின்தொடர்ந்து சென்ற நபர், கல்லூரி மாணவியை அருகில் இருந்த மாந்தோப்பிற்குள் இழுத்துச் சென்று, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து கொலைச் செய்து விட்டு பின் லாபிக்கு மீண்டும் திரும்பியதாக போலீசார் தெரிவித்தனர்.
ரகசிய தகவலின் பேரில், மும்பை காவல்துறையைச் சேர்ந்த ஒரு குழு குற்றம் சாட்டப்பட்டவர் பாந்த்ரா-பூஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ததைக் கண்காணித்தது. ரயில் வாபி ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்கு நின்றிருந்த அதிகாரிகள் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 103 (கொலை), 64 (1) (கற்பழிப்பு), மற்றும் 66 (இறப்பை ஏற்படுத்துதல் அல்லது பலிவாங்கும் நிலை ஏற்படுதல்) ஆகியவற்றின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர்.
வல்சாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கரண்ராஜ் வகேலா கூறுகையில், “நேற்று மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பெண்ணை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செகந்திராபாத் ஜிஆர்பி ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் பேசி சந்தேக நபரை கைது செய்தது குறித்து தெரிவித்தோம்.
குற்றம் சாட்டப்பட்டவரின் கடந்தகால குற்றங்கள் குறித்து, அக்டோபர் 25 அன்று பெங்களூருவில் இருந்து முர்தேஷ்வருக்கு செல்லும் ரயிலில் அவர் ஒருவரைக் கொன்று அவரது உடைமைகளைக் கொள்ளையடித்ததாக போலீசார் தெரிவித்தனர். நவம்பர் 19 அன்று, வல்சாத் கொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு இசை ஆசிரியரைக் கொலைச் செய்துள்ளார். மேற்கு வங்கம் வழியாக சென்று கொண்டிருந்த கதிஹார் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவரது விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக ஹவுரா ஜிஆர்பி ஸ்டேஷனில் புகார் பதிவு செய்யப்பட்டது. அக்டோபரில் புனே மற்றும் கன்னியாகுமரி இடையே ஓடும் ரயிலில் பயணித்த ஒரு பெண்ணைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக் கொண்டதாகவும், அந்த நபர் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் ரயில் நிலையம் அருகே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்வதற்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் வெவ்வேறு குற்றங்களுக்காக ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டு மே 2024ல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்
வகேலா கூறுகையில், “நெடுஞ்சாலை ஓட்டல்களில் நிறுத்தப்படும் லாரிகளில் திருடுவது வழக்கம். அவர் மீது ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . ஆயுதக் கடத்தலிலும் ஈடுபட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெவ்வேறு ரயில்களில் பயணம் செய்து, தனியாகக் காணப்பட்ட பயணிகளைக் கொலை செய்வதற்கு முன்பு கொள்ளையடித்து வந்தனர்.
சந்தேக நபர் எவ்வாறு கண்காணிக்கப்பட்டார் என்பது பற்றிய விவரங்களை அளித்த வகேலா, “உத்வாடாவில் உள்ள குற்றப் பகுதியில், நாங்கள் இரண்டு பைகளைக் கண்டோம். ஒன்று பாதிக்கப்பட்டவருக்கு சொந்தமானது, மற்றொன்றில் ஒரு ஜெர்சி மற்றும் ஒரு ஜோடி ஷார்ட்ஸ் இருந்தது. வாபி ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை நாங்கள் சரிபார்த்தோம். அதே ஜெர்சி அணிந்த ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து செல்வதைக் கண்டோம். பை கூட அப்படியே இருந்தது. சந்தேக நபரின் படங்களை பல்வேறு மாநிலங்களில் உள்ள ரயில்வே போலீசாரிடம் பகிர்ந்துள்ளோம்.
இதற்கிடையில் போலீசார் சூரத் மத்திய சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சந்தேக நபரின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டனர். “வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் ஆன்லைன் பதிவில் அவரது படத்தை உள்ளிடுகையில், அது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜோத்பூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவருடன் ஒத்துப்போவதைக் கண்டறிந்தோம். அவரது குடும்பத்தினர் ரோஹ்தக்கில் இருப்பதைக் கண்டுபிடித்து அவரது மொபைல் எண்ணைப் பெற்றோம். அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவரது கடைசி இருப்பிடம் வதோதராவில் காண்பித்தது.
விழிப்புடன் இருந்த பாந்த்ரா ரயில்வே போலீஸ் குழு சந்தேக நபர் அங்குள்ள ரயில் நிலையத்தில் காணப்பட்டதாகவும், பாந்த்ரா-புஜ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வதாகவும் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள 5,000 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சோதித்ததாகவும், ஆயிரக்கணக்கான மக்களிடம் விசாரணை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள போலீஸ் அதிகாரிகளுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளதாக வல்சாத் போலீசார் தெரிவித்தனர் . குற்றம் சாட்டப்பட்டவரின் இடது காலில் ஊனம் உள்ளது. அதன் காரணமாக அவர் கால்களைத் தாங்கி தாங்கி நடந்தார். இது அவரை அடையாளம் காண உதவியது என்றனர்.
அவரிடம் இருந்து ரூ.25,604 பணம், மூன்று செல்போன்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த கத்தி ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக வல்சாத் போலீசார் தெரிவித்தனர். மேலும் பல குற்றங்களில் அவருக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். நாங்கள் பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து, கண்டறியப்படாத கொலை வழக்குகளின் விவரங்களைப் பெறுகிறோம்”என்று வகேலா கூறினார்.