undefined

கோட் ரிலீஸ் பரிதாபங்கள்.. அத்துமீறிய விஜய் ரசிகர்கள்.. கட்டுப்படுத்த போராடிய காவல்துறை!

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68வது படம் தி கோட். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், வைபவ், ஜெயராம், பிரேம்ஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய கோட் இன்று உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சிகளுடன் இப்படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள ராஜேந்திரன், உமா திரையரங்கம், ஆர்த்தி கிராண்ட் உள்ளிட்ட திரையரங்குகளில் இன்று விஜய்யின் கோட் படம் வெளியானது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மாநகராட்சி அனுமதி பெறாமல் திரையரங்குகள் முன்பு சாலையோரங்களில் 20க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்து ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். இதனால், தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த அனைத்து பேனர்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றிவிட்டு, ரசிகர்கள் தியேட்டர்களுக்குள் நுழைந்ததையடுத்து, இந்த பேனர்கள் அகற்றப்பட்டன. கோட் படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் வத்தலக்குண்டு பகுதிகளில்   வாகனங்களில் கொடி ஏந்தியபடி ஊர்வலமாக வந்து அட்ரா சிட்டி செய்தனர். அப்போது அவர்களது கார் ஜப்தி செய்யப்பட்டது.

இன்று காலை முதலே விஜய் ரசிகர்கள் திரையரங்குகளில் குவியத் தொடங்கினர். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கையில் ஏந்தியபடி மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் திரண்ட விஜய் ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் மதுரை மெயின் ரோடு, பேருந்து நிலைய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பலத்த சத்தம் எழுப்பினர். இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேகமாக வந்த விஜய் ரசிகர்களின் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வத்தலக்குண்டு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை