அடப்பாவிங்களா... வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான்பூச்சி.. கதறும் பயணிகள்...!
நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் சிறப்பே பயணம் செய்யும் நேரத்தில் சுடச்சுட சுவையான விருப்பமான உணவு பரிமாறப்படுவது தான். கட்டணம் கொஞ்சம் அதிகம் தான் என்றாலும் சொகுசு பயணத்திற்கும், வியாபார ரீதியாக பயணம் செய்பவர்களுக்கும் பெரும் உறுதுணையாக இவை இயக்கப்பட்டு வருகின்றன.
உணவு ருசியாக இல்லை என ஒரு சாரார் கூறுகின்றனர். வாங்குன காசுக்கு தகுந்த உணவு வழங்கப்படவில்லை என தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி 1 ம் தேதி ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூர் சந்திப்புக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் பயணித்த பயணி ஒருவர், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கிய உணவில் இறந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
IRCTC, பாதிக்கப்பட்டவரின் புகாருக்குப் பதிலளித்தது, “ஐயா, உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். ஒரு விரும்பத்தகாத சம்பவம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சம்பந்தப்பட்ட சேவை வழங்குநருக்கு பெரும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. " என்று இந்திய ரயில்வே கேட்டரிங் ஆணையம் தெரிவித்துள்ளது.
பயணிகளின் புகாருக்கு பதிலளித்த ரயில்வே நிர்வாகம், "அசௌகரியமான அனுபவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று கூறியது. ஆனால் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது மட்டுமின்றி, இந்திய ரயில்வே மீண்டும் அதே பதிலை அளித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரர் சேவை மன்னிப்பு கேட்டாலும், மக்கள் அதை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க