undefined

பட்டாசு ஆலை விபத்தில் 6 பெண்கள், 3 ஆண்கள் உடல் சிதறி பலி... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

 

 விருதுநகர் மாவட்டம் சிவகாசி  செங்கமலப்பட்டியில்  சரவணனுக்கு   சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த  பட்டாசு ஆலையில், 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் அமைந்துள்ளன.
இன்று வழக்கம் போல்  மதிய உணவு இடைவேளைக்கு பிறகு  தொழிலாளர்கள் தங்களது பணியை தொடங்கி  பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தானது அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 7க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.  


இந்த வெடி விபத்தில் சிக்கி பெண்கள்6 பேர், ஆண்கள் 3 பேர் என மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.  11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில்   தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறை தீயை கட்டுக்குள் கொண்டு வந்து  மீட்பு பணிகளை செய்து வருகிறது.   பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்  “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழதிருத்தங்கல் கிராமத்தில்   தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

 உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.  படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து  உயிர்காப்பு சிகிச்சைகள வழங்க உத்தரவிட்டுள்ளேன்.   உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.  பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!