undefined

போலீசுக்கு துப்பு... அரசு ஊழியர் உட்பட 2 பேர் தலை துண்டித்து கொலை!

 

போலீசாருக்கு துப்பு கொடுத்ததால் அரசு ஊழியர் உட்பட 2 பேரை மாவோயிஸ்ட்கள் வெட்டி படுகொலைச் செய்துள்ள சம்பவம் தெலுங்கானா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறி, தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தை சேர்ந்த அரசு அதிகாரி உள்பட 2 பேரை மாவோயிஸ்ட்கள் தலையை வெடித்து படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மலைப்பகுதிகளை இருப்பிடமாக கொண்டு செயல்படும் மாவோயிஸ்ட்கள் கிராம மக்களை மிரட்டி சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுவார்கள். சில மாநிலங்களில் எல்லைப் பாதுகாப்பு படையினர் மாவோயிஸ்ட்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று வருகின்றனா். இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்த கிராம பஞ்சாயத்து செயலாளரான ரமேஷூம், கூலி வேலைப் பார்த்து வரும் அர்ஜுன் என்பவரும் ஜன்கலபள்ளி வனப்பகுதியில் பதுங்கி உள்ள மாவோயிஸ்ட்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த மாவோயிஸ்ட்கள் அவர்கள் 2 பேரையும் வீட்டின் முன்பு வைத்து வெட்டி கொன்று விட்டு தப்பி சென்றனர். இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனா். அந்த தகவலின் போில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனா். அவர்கள் அரசு அதிகாரி உள்பட 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனா்.

இது தொடர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில் போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்ததால், மாவோயிஸ்ட் கும்பல் அவர்களை படுகொலை செய்தது தெரிந்தது. மேலும் அந்த கும்பல் கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க வனத்துறை உதவியுடன், போலீசார் ஈடுபட்டு வருகின்றனா். தெலங்கானாவில் அதிகாலையில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!