undefined

பாம்பனில் மேகவெடிப்பு... கொட்டித் தீர்த்த கனமழை!

 

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் தென்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த சில நாட்களாக  பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், நாகை, திருவாரூர்  மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை பெய்து வருகிறது.


இந்நிலையில், நாகை, ராமநாதபுரம், திருவாரூர்  மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மிகக் குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக் கூட்டங்கள் காரணமாக பாம்பனில் மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  19 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 41.1 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 32.2 செ.மீட்டரும், பாம்பனில் 26.1 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!