குளோனிங் டோலி ஆட்டை உருவாக்கிய விஞ்ஞானி காலமானார்!!
குளோனிங் முறையை முதன் முதலில் சாத்தியப்படுத்தி காட்டியவர் பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில் முட். இவர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி காலமானர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 79.குளோனிங் என்பது ஒரு உயிர் போலவே மற்றொன்றை உருவாக்குவது. அதே உருவ அமைப்பு கொண்டதே குளோனிங் . இந்த முறை மனிதர்கள் மத்தியில் சாத்தியப்படவில்லை
அந்த ஆட்டிற்கு அமெரிக்க பாடகர் டோலி பார்ட்டனின் நினைவாக டோலி எனப் பெயரிடப்பட்டது. அந்த நேரத்தில் மிகப்பெரிய புரட்சியாக அமைந்தது. இந்நிலையில், டோலி ஆட்டை உருவாக்கிய குழுவை வழிநடத்திய விஞ்ஞானி இயன் வில்முட் உயிரிழந்ததாக ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இவரது மறைவிற்கு விஞ்ஞானிகள், பிரபலங்கள், தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!