undefined

துப்புரவு பணியாளர் மகள்  நகராட்சி ஆணையராக  பதவியேற்பு!

 

 திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டுத்தெரு பகுதியில் வசித்து வருபவர்  சேகர். இவருடைய மனைவி செல்வி. இவா்களுடைய மகள் 30 வயது துர்கா. இவர் மன்னார்குடி நகராட்சி துப்புரவு பணியாளராக பணிபுரிந்து சேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்ற துர்காவுக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் வசித்து வரும்   நிர்மல் குமாருக்கும்  2015ம் ஆண்டு திருமணம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 2022ல்  குரூப் 2 தேர்வு எழுதி முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்ற துர்கா இந்த ஆண்டு நடந்த நேர்முகத்தேர்வில் 30 க்கு 30 மதிப்பெண்கள் பெற்று நகராட்சி ஆணையராக தேர்ச்சி பெற்றார். இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையராக அவருக்கு பணி நியமன ஆணையை சமீபத்தில் தமிழக முதல்வர்  ஸ்டாலின் வழங்கினார்.

3 மாத பயிற்சிக்கு பிறகு நேற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக துர்கா பொறுப்பேற்றார். அவருக்கு நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, திருவாரூா் மாவட்ட கலெக்டர் தி. சாருஸ்ரீயை அவரது அலுவலகத்தில் சந்தித்த துா்கா அவரிடம் வாழ்த்துப் பெற்றுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!