undefined

11ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை.. கதறித் துடித்த தாய்... .!

 

தஞ்சாவூர் மாவட்டம் மானம்புச்சாவடி பகுதியில்   இடையர் தெருவில் வசித்து வருபவர்   கதிரேசன். இவர், தஞ்சாவூரில் பியூட்டி பார்லர் வைத்து  நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வகுமாரி . இந்த தம்பதிக்கு மொத்தம்   3 மகள்கள். இதில் 3 வது மகள் 16 வயது காவ்யப்பிரியா. இவர் தஞ்சாவூர்  தனியார் பள்ளி ஒன்றில்  11ம் வகுப்பு படித்து வந்தார்.
இவருடைய தாய் செல்வகுமாரி கடந்த ஆண்டு தனது வீட்டிற்கு அருகே உள்ள பெண்ணிடம் கடன் கொடுத்துள்ளார்.

இதனை திருப்பி கேட்கும் போது தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி அடிக்கடி நடைபெற்று வந்தது. காவியா இது குறித்து தனது தாயிடம் தகராறு செய்ய வேண்டாம் அவமானமாக இருக்கிறது என பலமுறை கூறினார்.  ஆனாலும்   தாய்க்கும், அந்த பெண்ணுக்கும் தினசரி  வாய்த்தகராறு தொடர்ந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.  
இதனையடுத்து மாணவி காவியபிரியா தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார்.   உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில்  தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்தார்.  அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த தாய் செல்வகுமாரி தனது மகளின் நிலையை பார்த்து கதறிக் கூச்சல் போட்டார்.  அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள்   ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக   விட்டதாக தெரிவித்தனர்.அத்துடன் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.இந்த தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார்   பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றிபிரதே பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க