undefined

மெட்ரோ, விமான நிலைங்களின் பாதுகாப்பை இனி பெண்கள் சிஐஎஸ்எஃப் ஏற்கும்... அமித் ஷா தகவல்!

 

நாடு முழுவதும் விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களை பாதுகாக்கும் பொறுப்பையும், விஐபிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பையும் இனி புதிதாக உருவாக்கப்படும் பெண்கள் சிஐஎஸ்எஃப் ஏற்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள  பதிவில், "தேசத்தை கட்டியெழுப்புவதில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையை மெய்ப்பிக்கும் வகையிலான உறுதியான நகர்வில், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) முதல்முறையாக பெண்கள் மட்டுமே அடங்கிய பட்டாலியனுக்கு மோடி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

உயரடுக்கு படையாக உயர்த்தப்படும் விதமாக விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் பொறுப்பையும், கமாண்டோக்களாக விஐபிகளுக்கு பாதுகாக்கும் பொறுப்பையும் இனி மகளிர் பட்டாலியன் ஏற்கும். இந்த முடிவு, நாட்டைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பில் அதிக எண்ணிக்கையிலான பெண்களின் விருப்பங்களை நிறைவேற்றும்" என்று தெரிவித்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!