அதிர்ச்சி.... டிக்டாக் மட்டுமல்லாமல் ஆன்லைன்  கேமிங் ஆப்ஸ் மூலம் இணைய உலகை உளவு பார்க்குது சீனா!

 

  
இணையப் பயனர்களை கண்காணிக்க சீனா ஆன்லைன் கேம் உட்பட பல ஊடகங்களை பயன்படுத்தி வருகிறது. இது குறித்து ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வை மேற்கோள் காட்டி வாய்ஸ் ஆப் அமெரிக்காவில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  ஆஸ்திரேலிய அரசு மற்றும் வெளிநாடுகளில் உள்ள மற்றவர்களிடமிருந்து நிதியுதவி பெறும் ஆஸ்திரேலிய மூலோபாயக் கொள்கை நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  "பெய்ஜிங்கின் பிரச்சாரத் தலைவர்கள் பலவிதமான சமூக ஊடகப் பயன்பாடுகளில் இருந்து தனிப்பட்ட தரவைச் சேகரிக்க சீன தொழில்நுட்ப நிறுவனங்களுடன் தொடர்பு கொள்கின்றனர்.  
"உலகளாவிய தகவல் சுற்றுச்சூழலை மறுவடிவமைப்பதற்காக வெளிநாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும்... அதிகாரத்தின் மீதான தனது பிடியை வலுப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை சட்டப்பூர்வமாக்கவும், சீனாவின் கலாச்சார, தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் இராணுவ செல்வாக்கை உயர்த்தவும் சீனா செயல்படுகிறது" என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.  


ஆனால், சீன அதிகாரிகளிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.  பல்வேறு புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக தகராறுகள் தொடர்பாக ஆஸ்திரேலிய அரசாங்கம் "சீனா எதிர்ப்பு வெறி" என்று பெய்ஜிங் முன்பு குற்றம் சாட்டியது. ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்திடம், ஆப்ஸ், பிளாட்ஃபார்ம்கள் மற்றும் கேம்களில் இருந்து பெறப்பட்ட தரவு சீனாவிற்கு மதிப்புமிக்கதாக இருக்கும் எனக் கூறப்பட்டது.  "உலகம் உண்மையையும் யதார்த்தத்தையும் உணரும் மற்றும் புரிந்துகொள்ளும் விதத்தை சீனா வடிவமைக்க முயற்சிக்கிறது. இந்த தரவுகள் மூலம்  காலப்போக்கில் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க  உதவும்." என பரிந்துரைக்கிறது.   
அது சேகரிக்கும் பயனர் தரவு சீன அதிகாரிகளுடன் பகிரப்படலாம் என்ற கவலையின் காரணமாக, சீனாவுக்குச் சொந்தமான இயங்குதளமான TikTok மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. எப்படி இருந்தாலும் "டிக்டாக் ஆப்பை காட்டிலும் இன்னும் எச்சரிக்கையாக இதனை செயல்படுத்தி வருகிறது” 

இதனையடுத்து டிக்டாக்கை தடை செய்ய பல உலக நாடுகள் பரிசீலித்து வருகின்றன.  சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள ஆஸ்திரேலியா-சீனா உறவுகள் நிறுவனத்தின் இணைப் பேராசிரியரான மெரினா ஜாங் “ சீனா உலகக்ம் முழுவதும் சமூக வலைதளங்களில் பல வகையான ஆப்கள் மூலம் அனைத்து தரவுகளையும் திரட்டி வருகிறது” எனக் கூறியுள்ளார்.  மேலும் இது போன்ற தரவுகள் திருட்டு தொடர்ந்து சீனா உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்படும்.  "எனவே, சீனாவிற்கும் மேற்கிற்கும் இடையே ஒரு முழுமையான தொழில்நுட்ப துண்டிப்பை உருவாக்கி விடும் அபாயம் உருவாகிக் கொண்டிருக்கிறது. அது யாருக்கும் பயனற்றதாகவே அமையும். ஆஸ்திரேலியா அரசு  பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அச்சம் காரணமாக கடந்த ஆண்டு  TikTok ஐ தடை செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.  
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!