அதிர்ச்சி.. ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பலி.. சோகத்தில் மூழ்கிய தேசம்..!

 

சிலியின் முன்னாள் அதிபர் ஜெபஸ்டின் பினேரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். தென் அமெரிக்க நாடான சிலியின் அதிபராக செபாஸ்டியன் பினேரா இரண்டு முறை பதவி வகித்தார். 2010 முதல் 2014 வரையிலும், 2018 முதல் 2022 வரையிலும் ஆட்சியில் இருந்த அவர், தனது ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்தார்.

அவர் அந்நாட்டின் பணக்காரர்களில் ஒருவர். இந்நிலையில், அந்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான லாகோ ரங்கோவுக்கு ஜெபஸ்டின் பினேரா ஹெலிகாப்டர் மூலம் நேற்று பயணம் செய்தார். அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணம் செய்தனர். லாகோ ரங்கோ அருகே சென்று கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினேரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணம் செய்த மீதமுள்ள 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜனாதிபதி கேப்ரியல் போரிக், 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க