undefined

 அமெரிக்காவில் கெத்து காட்டிய முதல்வர்... கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்... ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் விவாதம்!

 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்குச் சென்று முதலீடு மற்றும் கூட்டாண்மைக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்களுக்குச் சென்றது பிரமிப்பு அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்

கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, தமிழ்நாட்டில் AI ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று கூகுள் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை மவுண்டன் வியூ வளாகத்தில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்களின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளை தமிழகத்தில் தொடங்குவது குறித்தும் விவாதித்தார். 

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், கூகுளுடன் இணைந்து எதிர் வரும் காலங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களை அதிநவீன AI திறன் வளர்ச்சியுடன் தயார்படுத்த தமிழ்நாடு தயாராக உள்ளதாக கூகுள் நிறுவன அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதனைதொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்களை நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை