undefined

செம...  மாரியப்பன் தங்கவேலு தடைகளைத் தாண்டி ஹாட்ரிக் பதக்கம் வென்று சாதனை...  முதல்வர் வாழ்த்து!

 

 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் போட்டியில்  மாரியப்பன் தங்கவேலு 3 வது முறையாக பதக்கம்  வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில்  தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

 இந்தப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த எஸ்ரா ஃப்ரெச் 1.94 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கமும், இந்திய வீரரான ஷரத் குமார் 1.88 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தைச் சேர்த்த வீரரான மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலமும் வென்றனர்.  

இது குறித்து  தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து பதிவில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக மாரியப்பன்  2016 ல்  பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ பாராலிம்பிக்ஸில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், 2020 ல் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை