முதல் நாள் சமைத்த சிக்கன்... விடிந்ததும் சாப்பிட்ட 12 வயது சிறுமி மரணம்!

 

திருச்சியை அடுத்துள்ள அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, முதல் நாள் சமைத்த சிக்கன் உணவை விடிந்ததும் அடுத்த நாள் சாப்பிட்ட 12 வயது சிறுமி, உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உள்ள கூழாட்டுக்குப்பம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (45). இவரது மனைவி அன்பரசி (38). இந்த தம்பதிக்கு துவாரகா (15) இலக்கியா (12) என 2 மகள்களும் முகுந்தா என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் முதல் நாள் சமைத்து வைத்த சிக்கன் உணவை வீட்டில் உள்ள அனைவரும் சனிக்கிழமை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 4 பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இலக்கியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தா. பழூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், முதல்நாளான வெள்ளிக்கிழமை வீட்டில் சமைத்த கோழிக்கறி உணவை சனிக்கிழமை இரவு அனைவரும் சாப்பிட்டதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!