undefined

சார்ஜ் ஸ்டேஷன்.. ஸ்மார்ட்போனை அசால்ட்டா விட்டு செல்லும் இளம் பெண்.. அடுத்து நடந்த ஆச்சரியம்!

 

துபாயில் உள்ள ஒரு மாலில் உள்ள சென்சார் பாயின்ட்டில் ஒரு இளம்பெண் தனது ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், வ்லாகர் Tetiana Skorina தனது ஸ்மார்ட்போனை பொதுவெளியில் இருக்கும் சார்ஜிங் பாயிண்டுடன் இணைப்பதைக் காட்டுகிறது.  வீடியோவில், டெட்டியானா தனது ஸ்மார்ட்போனை சார்ஜிங் பாயிண்டுடன் இணைத்து விட்டு ஷாப்பிங் செய்ய செல்கிறார்.

இரண்டு மணி நேரம் கழித்து, அவர் திரும்பி வந்து தனது ஸ்மார்ட்போனை எடுத்தார்.  சார்ஜிங் பாயின்ட்டில் இருந்த வரை யாரும் செல்போனை எதுவும் செய்யவில்லை என்பதைக் கவனித்தார். இந்த வீடியோ ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு நிலைகளை மையமாக வைத்து மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் துபாய் கடுமையான பாதுகாப்பு நிலையை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், இந்த வீடியோவை பார்த்த மக்கள், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடக்கும் குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் திருட்டு ஒரு குற்றமாகக் கருதப்படுகிறது மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளுக்கு உட்பட்டது.

திருடப்பட்ட பொருளின் மதிப்பின் அடிப்படையில் திருட்டுக்கான தண்டனைகள் மாறுபடும். AED 3,000 (ரூ. 68,537) அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். துபாயின் பாதுகாப்பு சீர்திருத்தங்கள் குறித்து உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியுள்ளது.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை