நாளை முதல் 3 நாட்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகளே குறிச்சிக்கோங்க!!

 

சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இன்று  53 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில்கள் அதற்கு பதிலாக கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றன. இன்று ஒரு நாள் மட்டுமே இந்த சேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மீண்டும் ரயில் சேவையில் மாற்றம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர் - விழுப்புரம்  வழித்தடத்தில் பரங்கிமலை  ரயில் பாதை மேம்பாட்டு  பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக  மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு சில ரயில் சேவைகள்  ரத்தும் செய்யப்பட்டன.  இதனையடு்த்து இன்று  சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 53 மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.  


இந்தநிலையில் நாளை முதல் நவம்பர்  3 ம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன் படி,  சென்னை எழும்பூரில் இருந்து இரவு நேரத்தில் புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்,மன்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை நாளை முதல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நவம்பர்  3ம் தேதி வரை, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 முதல் 11.55 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!