undefined

தமிழகத்தில் டிசம்பர் 10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் அறிவிப்பு!

 

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று டிசம்பர் 5ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் டிச. 5, 6 ஆகிய தேதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலையுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தஞ்சாவூா் மாட்டம் பூதலூரிலும், திருச்சி மாவட்டம் துவாக்குடியிலும் தலா 50 மி.மீ. மழை பதிவானது.

குன்னூா், கேத்தி, அழகரை எஸ்டேட் (நீலகிரி), கீழச்செருவை (கடலூா்) ஆகிய இடங்களில் தலா 30 மி.மீ. மழை பதிவானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!