இரவு முழுவதும் சார்ஜ் போட்டதால் வெடித்த செல்போன்.. அடுத்தடுத்து பலியான 4 குழந்தைகள்!

 

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மோடிபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜானி. இவருக்கு மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு, குழந்தைகள் தங்கள் அறையில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, செல்போனில் சார்ஜ் குறையத் தொடங்கியது. அருகில் இருந்த போனை சார்ஜ் செய்துவிட்டு தூங்கச் சென்றனர்.

நள்ளிரவில் செல்போன் சார்ஜரில் ஏற்பட்ட ஷார்ட் சர்க்யூட் காரணமாக செல்போன் வெடித்து அருகில் இருந்த பொருட்களுக்கும் தீ பரவியது. குழந்தைகள் அனைவரும் தீயில் சிக்கினர். இருப்பினும், பெற்றோர்கள் குழந்தைகளை காப்பாற்ற முயன்றபோது, அவர்களும் தீயில் சிக்கினர். உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து அவர்களை காப்பாற்றினர்.

பின்னர், அவர்கள் அருகில் உள்ள எல்எல்ஆர்எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து வயது கல்லு, ஆறு வயது கோலு, எட்டு வயது நிஹாரிகா மற்றும் 12 வயது சரிகா ஆகிய குழந்தைகள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர். பெற்றோர் ஜானி மற்றும் பபிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்களை சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தக் கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம். இரவில் செல்போனை சார்ஜ் செய்துவிட்டு பலர் தூங்கிவிடுகிறார்கள். முழுமையாக சார்ஜ் ஆன பிறகும் சுவிட்ச் ஆஃப் செய்யப்படாததால் பேட்டரி அதிக வெப்பமடைந்து வெடிக்கும். இதனால், பலர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் தற்போது நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, சார்ஜரை முழுமையாக சார்ஜ் செய்த பிறகு அகற்ற வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்