undefined

 செல்போன் சார்ஜ் போட்ட இளம்பெண் மரணம்! நொடிப்பொழுதில் பாய்ந்த மின்சாரம்!

 
 

செல்போன், லேப்-டாப் சார்ஜ் போடும் ஒயர்களில் மின்சாரம் தாக்காது என்கிற தவறான புரிதல் இன்னும் பலபேரிடையே இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் விடுதி அறை ஒன்றில் லேப்-டாப் சார்ஜ் போட்ட பயிற்சி மருத்துவ பெண்மணி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அதன் பின்னர், தமிழகத்தில் செல்போன் சார்ஜ் போட்டதில் மின்சாரம் தாக்கி இரண்டு, மூன்று மரணங்கள் நேர்ந்து விட்டது. இந்நிலையில், சேலத்தில் செல்போன் சார்ஜ் போட்ட இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகரைச் சேர்ந்த தம்பதியர் கெளதம்-ராதா. நேற்று காலை தன்னுடைய செல்போனைச் சார்ஜ் போடுவதற்காக முயன்ற ராதா மீது திடீரென மின்சாரம் பாய்ந்த நிலையில், சம்பவ இடத்திலேயே ராதா தூக்கி வீசப்பட்டார்.

தன் கண் எதிரிலேயே மனைவி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டது கண்ட கெளதமும், ராதாவின் தந்தையும் அலறியடித்தப்படி ராதாவை சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். 

செல்போன் சார்ஜ் வயர் சேதமாகி மின்சாரம் தாக்கியதில் ராதா உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.