undefined

CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு!

 

2025ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10வது மற்றும் 12வது மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எப்போது தேர்வு என்பது குறித்த தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போது பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் தொடங்கும் தேதிகள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம்  நவம்பர் 28ம் தேதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில்  2025 பிப்ரவரி 15ம் தேதி தியரி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதற்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2025 ல் தொடங்கப்படவுள்ளது. அதனைப் போல்  இந்த ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 5, வரை சி.பி.எஸ்.இ குளிர்காலப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளது.  அடுத்த ஆண்டும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில்  8,000 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ தேர்வு நடத்தப்படவுள்ளது. இந்த தேர்வை 44 லட்சம் மாணவர்கள் எழுதுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, சி.பி.எஸ்.இ வாரியம்  2024 ம் ஆண்டுக்கான  10 ம் வகுப்பு மற்றும் 12வது தேர்வு முடிவுகளை வெளியிடும்போதே அடுத்த ஆண்டுக்கான தேர்வு 2025 பிப்ரவரி 15 ம் தேதி தொடங்கும் என உறுதிப்படுத்தி இருந்தது.  

இன்னும் முழுவதுமான அட்டவணையை வெளியிடவில்லை. விரைவில் சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை 2025 வெளியான பிறகு, அது சி.பி.எஸ்.இ  அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in  ல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!