மாஸ்... பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்... நிறைவேறிய அதிரடி சட்டம்!
உலகம் முழுவதுமே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை பெருகி வருகிறது. இதனை தடுக்க உலக நாடுகள் பல சட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கர் சிறுமிகளை பாலியல்வன்கொடுமை செய்பவர்களுக்கு உடனடி ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்ற புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது
இதன்படி மடகாஸ்கரின் நாடாளுமன்றம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு ரசாயனம் அல்லது அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்யப்படும் சட்டத்தை இயற்றியுள்ளது.
இந்த சட்டத்திற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனாலும் ஒரு சில அமைப்புகள் பெரியஅளவில் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
மடகாஸ்கர் தீவின் மொத்த மக்கள் தொகை 2 .8 கோடி இருக்கும் நிலையில் இச்சட்டம் நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 2ம் தேதி சட்டத்தை நிறைவேற்றியது. செனட் சபை உடனடியாக இச்சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இது இப்போது உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அதிபர் ஆண்ட்ரெஸ் ரஜோலினாவால் சட்டமாகியுள்ளது. குழந்தைகள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இது அவசியமான நடவடிக்கை என அந்நாட்டு நீதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இது குறித்து “ 2023ல் 600 சிறுமிகளும் நடப்பாண்டில் 133 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தின் விதிகளின்படி,10 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கும் தண்டனை வழங்கப்படும். அதே நேரத்தில், 10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை அல்லது ரசாயன முறை மூலம் தண்டணை வழங்கப்படும். 14 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்தால், ரசாயன முறை மூலம் காஸ்ட்ரேஷன் தண்டணை விதிக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மடகாஸ்கர் தவிர கலிஃபோர்னியா மற்றும் புளோரிடா, மேலும் சில அமெரிக்க மாகாணங்களிலும் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு ரசாயன காஸ்ட்ரேஷன் தண்டணை வழங்கி வருகின்றன.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க