undefined

பாஜக எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

 

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த நவம்பர் 7ம் தேதி, சென்னை விமான நிலையத்தில் எச். ராஜா செய்தியாளா்களிடம் பேசுகையில், 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவா் ஜவாஹிருல்லா, விசிக தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்' என்று பேசியிருந்தார். 


இது தொடா்பாக மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் போலீசார் எச்.ராஜா மீது கலவரத்தை தூண்டுதல், வன்முறையை தூண்ட முயற்சித்தல், பொய்யான தகவலை பரப்புதல், இரு தரப்பினரிடையே பகைமையை வளா்த்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக எச்.ராஜாவிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனா்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!