undefined

‘ஐம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தா தப்பாப்பா’ பாடகி இசைவாணி, இயக்குநர் ரஞ்சித் மீது வழக்குப்பதிவு! 

 

‘ஐம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தா தப்பாப்பா’ என ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக பாடகி இசைவாணி பாடியிருக்கும் பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக பாடகி இசைவாணி மீதும் இயக்குநர் ரஞ்சித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கானா பாடகியாக பிரபலமானவர் இசைவாணி. இந்த பிரபல்யத்தைப் பயன்படுத்தி பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக முன்பு நுழைந்தார். இப்போது சினிமா, தனியிசை பாடல்கள் என பிஸியாக வலம் வருகிறார். இயக்குநர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒவ்வொரு வருடம் டிசம்பர் மாதத்திலும் மார்கழியில் மக்களிசை என்ற இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் இசைவாணி ஐயப்ப பக்தர்களை சீண்டும் விதமாக, ‘ஐம் சாரி ஐயப்பா, உள்ளே வந்தா தப்பாப்பா’ என்ற பாடலை பாடியிருப்பார்.

<a href=https://youtube.com/embed/SkG1rTA4ris?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/SkG1rTA4ris/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த பாடல் தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே ஐப்பன் கோவிலுக்கு நுழைய வேண்டும் என்பது தொடர்பாக நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே பெரும் சர்ச்சைகளும், எதிர்ப்புகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் விதமாகவே இசைவாணி இந்தப் பாடலை பாடியிருக்கிறார் என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இதற்கு முன்பு இது குறித்தான விவாதம் எழுந்திருக்கும் நிலையில் இசைவாணி இப்படியான வரிகளோடு பாடல் பாடியிருப்பது ஐயப்பனையும் தங்கள் உணர்வுகளையும் புண்படுத்தியிருப்பதாக ஐயப்ப பக்தர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மேலும், இசைவாணி மற்றும் இயக்குநர் ரஞ்சித் மீதும் கோவை மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!