undefined

 கார் மீது லாரி மோதி விபத்து... 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் மரணம்!

 
உத்தரபிரதேச மாநிலத்தில் கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ஆக்ரா - லக்னோ விரைவு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார்  ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி தடுமாறியது.

<a href=https://youtube.com/embed/5fvFU6cfZjI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/5fvFU6cfZjI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

அப்போது அந்த வழியே வேகமாக வந்துக் கொண்டிருந்த லாரி, நேருக்கு நேராக அசுர வேகத்தில் கார் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரில் பயணித்த 5 மருத்துவர்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் சாய்பாய் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வந்தவர்கள் என்றும், லக்னோவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு, வீடு திரும்பி சென்றுக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!