undefined

 வெளிமாநில மதுபானப் பாட்டில்கள் கடத்தி வந்த கார் பறிமுதல்!

 
ஆத்தூர் அருகே 756 வெளி மாநில மதுபானப் பாட்டில்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார் மற்றும் போலீசார் பாலமுருகன், முனியசாமி ஆகியோர் சேர்ந்தபூமங்கலம் முத்தாரம்மன் கோயில் அருகே நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஆள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனையிட்டனர்.

அதில், 756 வெளிமாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காருடன் மதுபானப் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். காரின் உரிமையாளர் குரும்பூர் சோழியகுறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முருகன் என்பவரை தேடி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!