undefined

அதிகாலையில் சோகம்..   பயங்கர கார் விபத்தில் 2 பேர் கவலைக்கிடம்...  4 பேர் படுகாயம்!!

 

சென்னை அண்ணா நகரில் இன்று நவம்பர் 13ம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு கார் ஒன்று  அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. இதனால் கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.  இந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்  2 பேர்  நிலைமை படுமோசமாக உள்ளது .  

இந்த விபத்தினை அடுத்து காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடிய நிலையில், பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தவர்கள் மீதும் மோதியுள்ளது. மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

 இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மதுபோதையில் கார் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.