undefined

மக்களே உஷார்.. கேன்சரை உண்டாக்கும் பஞ்சு மிட்டாய்.. பகீர் கிளப்பும் உணவுத் துறையினர்..!

 

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிங்க் நிறத்தில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் கலந்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறையினர் உறுதி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் 'பிங்க்' நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் பெருமளவு கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்தனர்.


இதையடுத்து கலர், கலராய் விற்கப்படும் பஞ்சு மிட்டாய் வியாபாரிகளை தேடி கண்டுபிடித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். பஞ்சு மிட்டாய் விற்கும் வட மாநில தொழிலாளர் 30க்கும் மேற்பட்ட தேடுகின்றனர்.'பிங்க்' பஞ்சு மிட்டாய்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கூறப்பட்டது. கார்சினோஜென் என்பது புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்களின் ஒரு குழு.

ஒட்டுமொத்தமாக புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் கார்சினோஜென்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. புகையிலையில் உள்ள குறைந்தது 70 இரசாயனங்கள் உங்கள் டிஎன்ஏவை சேதப்படுத்துவதன் மூலம் புற்றுநோயை உண்டாக்குவதாக அறியப்படுகிறது. இதில் உள்ள பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக அறியப்படுகின்றன. எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இது போன்ற பஞ்சு மிட்டாயை வாங்கி தர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க