கனடாவின் முதல் பெண் ராணுவ தளபதி.. மூத்த அதிகாரியை கௌரவித்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!

 

கனடாவின் புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னன் நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவின் ராணுவ தளபதி வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில், புதிய ராணுவ தளபதியாக மூத்த பெண் ராணுவ அதிகாரி ஜென்னி கரிக்னனை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.  இதன் மூலம் கனடா வரலாற்றில் முதல் பெண் ராணுவ தளபதி என்ற பெருமையை ஜெனி கரிக்னன் பெற்றுள்ளார்.

தற்போது ஆயுதப்படைகளின் தொழில்முறை நடத்தை மற்றும் கலாச்சாரத்தின் தலைவராக இருக்கும் ஜென்னி கரிக்னன், கடந்த 35 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். 2008 ஆம் ஆண்டில், கனேடிய ஆயுதப் படைகளின் வரலாற்றில் ஒரு போர்ப் படைப் பிரிவுக்கு கட்டளையிட்ட முதல் பெண்மணி ஆனார். அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனேடியப் படைகளுக்கு தலைமை தாங்கிய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020 வரை ஈராக்கில் நேட்டோ பணியை வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!