undefined

டிசம்பர் 20ல் இடைத்தேர்தல்... காலியாக உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு அறிவிப்பு!

 

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள  6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அரியானா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கின்ற, நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான 6 இடங்களுக்கு வருகிற டிசம்பர் 20-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இவற்றில் ஆந்திர பிரதேசத்தில், வெங்கடரமணா ராவ் மொபிதேவி, பீதா மஸ்தான் ராவ் யாதவ் மற்றும் ரியாகா கிருஷ்ணையா ஆகிய 3 பேரும் கடந்த ஆகஸ்டில் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினர். இதனால், அந்த 3 இடங்களும் காலியாக உள்ளன. இதில், யாதவ் மற்றும் கிருஷ்ணையா ஆகியோரின் மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான பதவி காலம் 2028ம் ஆண்டு ஜூன் 21ம் தேதியுடன் முடிவடைகிறது. மொபிதேவியின் பதவி காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி முடிகிறது.

ஒடிசாவில், பிஜு ஜனதா தள கட்சியில் இருந்து சுஜீத் குமார் வெளியேற்றப்பட்டதும் அந்த இடம் காலியாக உள்ளது. அவருடைய பதவி காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதேபோன்று, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், அதனை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த ஜவகர் சர்கார் கடந்த செப்டம்பரில், எம்.பி. பதவியில் இருந்து விலகினார்.

அரியானாவில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரிஷன் லால் பன்வார், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றதும் எம்.பி. பதவியில் இருந்து விலகினார். இதனால், அந்த இடம் காலியாக இருக்கின்றது. இந்த சூழலில், காலியாக இருக்கின்ற இந்த 6 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஒடிசாவில் பாஜக ஆகிய கட்சிகளின் கை ஓங்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. அரியானாவில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைத்து உள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!