7 மாநிலங்கள், 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்!

 

 இந்தியா முழுவதும்  7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு 3 வது முறை பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தமிழகம், மேற்கு வங்காளம் உட்பட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன.  இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி 13 தொகுதிகளுக்கும்  ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்குதல் ஜூன் 14ம் தேதி  தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதில்   வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 21.  


இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 13ம் தேதி அறிவிக்கப்பட்டு முடிவுகள்  அன்றைய தினமே வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி , பீகாரில்   ரூபாலி, ராய்கஞ்ச், ரணகாட் தக்சின், பாக்தா, மணிக்தாலா (மேற்கு வங்காளம்), இமாச்சல் பிரதேசத்தில் உள்ள நலகர், டேரா, ஹமிர்பூர், பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதி, உத்தரகாண்டில் உள்ள மங்களூரு மற்றும் பத்ரிநாத், மத்திய பிரதேசத்தில் உள்ள அமர்வாரா  ஆகிய 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!