இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி.... இன்று முதல் வெண்ணெய், நெய் விலை உயர்வு!!
செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி, அடுத்த மாதம் நவராத்திரி பூஜை, நவம்பரில் தீபாவளி, டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் என இனி அடுத்தடுத்து பண்டிகை காலம் தான். இதற்காக மக்கள் இனிப்புக்கள், புத்தாடைகளோடு கொண்டாடுவர். ஏற்கனவே பால் முதல் மளிகைப் பொருட்கள் வரை விலை உயர்த்தப்பட்டு விழிபிதுங்கி வரும் நிலையில் தற்போது ஆவின் நிர்வாகம் வெண்ணெய் மற்றும் நெய்யின் விலையை மேலும் உயர்த்திஉள்ளது. இந்த அறிவிப்பால் இல்லத்தரசிகள் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பால் மற்றும் பால் பொருட்கள் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தினமும் 30 லட்சம் லிட்டர் பால், ஆவின் பாலகங்களில் இனிப்புகள், பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் நெய், வெண்ணெய்க்கு மக்களிடையே வரவேற்பு அதிகம் உள்ளது. தனியார் நெய், வெண்ணெயை விட சுவை கூடுதலாகவும் விலை குறைவாகவும் இருப்பது தான் காரணம். ஆனால் சமீபகாலமாக ஆவின் நிர்வாகம் படிப்படியாக இவைகளின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது . அந்த வகையில் தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெயின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 15 மில்லி லிட்டர் ஆவின் நெய்யின் விலை 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் , 100 மில்லி லிட்டர் நெய்யின் விலை 70 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், 100 மில்லி லிட்டர் நெய் பாட்டிலின் விலை 75 ரூபாயிலிருந்து 85 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
200 மில்லி லிட்டர் நெய் ரூ145 லிருந்து ரூ160 ஆகவும் 500 மில்லி லிட்டர் நெய் பாட்டில் ரூ315 லிருந்து ரூ365 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு லிட்டர் நெய்யின் விலை ரூ630 லிருந்து ரூ700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நெய் உயர்த்தப்பட்ட அதே நேரத்தில் ஆவின் வெண்ணெய் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 100 கிராம் ஆவின் நெய்யின் விலை ரூ 55 லிருந்து ரூ60ஆகவும், 500 கிராம் ரூ260லிருந்து ரூ275 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!