undefined

ரூ.45,000 கோடி சொத்துக்களை உதறிவிட்டு துறவறம் பூண்ட தொழிலதிபர் மகன்!

 

பிரபல தொழிலதிபரின் மகன் ஒருவர் ரூ.45,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை உதறிவிட்டு துறவறம் மேற்கொண்ட சம்பவம் மலேசியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய கோடீஸ்வரரான ஆனந்த் கிருஷ்ணாவின் ஒரே மகன் "வென் அஜான் சிரிபான்யோ" தந்தையின் தொழிலில் ஈடுபட விரும்பாமல் அத்தனை சொத்துக்களையும் உதறித்தள்ளி விட்டு துறவறம் பூண்டுள்ளார். சுமார் ரூ.45,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை இப்படி வேண்டாமென உதறிவிட்டு துறவறம் மேற்கொண்டுள்ளது மலேசியர்களிடையே பேசுபொருளாகி இருக்கிறது.

பலர் தனது தந்தையின் செல்வத்தைப் பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ விரும்பினாலும், அவர் தனது வாழ்க்கையை ஆன்மீகத்திற்காக அர்ப்பணித்துள்ளார். அஜான் சிரிபான்யோ ஒரு எளிய பௌத்த துறவியாகிவிட்டார்.

தொலைத்தொடர்பு, ஊடகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட் மற்றும் செயற்கைக்கோள்கள் என பல்வேறு துறைகளில் ஆனந்த் கிருஷ்ணா முதலீடு செய்துள்ளார். அவரது நிகர மதிப்பு தோராயமாக ரூ. 45,339 கோடி. மலேசியாவில் பிரபலமான பணக்காரர்களில் இவரும் ஒருவர். அஜான் சிரிபான்யோ தனது தந்தையின் பரந்த செல்வத்தில் எந்த அக்கறையும் இல்லாமல் ஆன்மீக வாழ்க்கையைத் தழுவினார்.

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற ஆனந்த் கிருஷ்ணாவிடம் மொத்தம் 3 தனியார் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உள்ளன. தற்போது இந்த 3 செயற்கைக்கோள்களும் பூமியை சுற்றி வருகின்றன. ஆனந்த் கிருஷ்ணன் ஒரு திறமையான தொழிலதிபர். மலேசிய வணிக வட்டாரங்களில் AK என்று அன்புடன் அழைக்கப்படும் டான்ஸ்ரீ ஆனந்த் கிருஷ்ணன், மதம் மற்றும் தொண்டு பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். நவம்பர் 26, 2024 நிலவரப்படி, ஆனந்த் கிருஷ்ணனின் நிகர மதிப்பு $5.1 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அபரிமிதமான செல்வம் இருந்தபோதிலும், ஆனந்த் கிருஷ்ணன் புத்த மதத்தின் போதனைகளில் ஆழமாக வேரூன்றியவர். அவரது மகன் சிரிபான்யோ தனது தந்தையின் செல்வத்தைத் துறந்து தனது ஆன்மீக பயணத்தை இன்னும் ஆழமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். மலேசியாவின் 50 பணக்காரர்கள் பட்டியலில் ஆனந்த் கிருஷ்ணன் தற்போது 6வது இடத்தில் உள்ளார்.

ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த கிருஷ்ணன். இவரது தலைமையில் ஏர்செல் முன்னணி நிறுவனமாக விளங்கியது. அபரிமிதமான செல்வத்தில் பிறந்த சிரிபான்யோ தனது தந்தை ஆனந்த் கிருஷ்ணனின் பல பில்லியன் டாலர் பேரரசின் வாரிசாக கருதப்பட்டார். ஆனால் 18 வயதில், சிரிபான்யோ தனது வாழ்க்கையை மாற்ற முடிவு செய்து துறவற வாழ்க்கையை நாடினார்.

படிப்படியாக, ஆன்மீகத்தின் மீதான ஆர்வம் திரும்பியது. தற்போது துறவு பாதையை முழுமையாக தழுவி 20 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டு வருகிறார். சிரிபான்யோ தற்போது தாய்லாந்தில் உள்ள "டாவோ டம்" மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வருகிறார்.

தியானம் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் மற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். சிரிபன்யோ சுமார் 8 மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர். எனவே, வாழ்க்கையில் உண்மையான வெற்றி பொருள் சார்ந்ததா? அல்லது ஆன்மீகமா? என்ற கேள்வியைக் கேட்க அவரது முடிவு நம்மைத் தூண்டியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!