செல்லப்பிராணிகளுக்கு மருத்துவமனை.. ரூ.165 கோடி செலவில் கட்டிய தொழிலதிபர் ரத்தன் டாடா..!

 

தொழிலதிபர் ரத்தன் டாடா செல்லப்பிராணிகளுக்கான மருத்துவமனை வசதிகளை வழங்கியுள்ளார்.டாடா இந்தியாவின் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் எஃகு, ஆட்டோமொபைல் உற்பத்தி, மென்பொருள் என அனைத்து வகையான துறைகளிலும் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் தொழிலதிபர்  ரத்தன் டாடாவுக்கு விலங்குகள் மீது அதிக பிரியம் இருக்கின்றது.



இதனால் செல்லப்பிராணிகளுக்கு மருத்துவ வசதி செய்து கொடுத்துள்ளார். இதற்காக மும்பையில் ரூ.165 கோடி செலவில் பிரம்மாண்டமாக மருத்துவமனை கட்டியுள்ளார். இது இந்தியாவின் மிகப்பெரிய ஆம்புலேட்டரி மருத்துவமனையாகும். வீட்டில் வளர்க்கும் கால் நடைகளுக்கு கட்டணம் உண்டு. மேலும் ஆதரவற்ற கால் நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா காலத்தில் இந்திய அரசுக்கு ரூ.500 கோடிக்கு மேல் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பொது மக்களுக்கு சேவை செய்வது புதிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க