உருக்கமான கடிதம் ... கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை...  தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை!

 

 பிரபல தொழிலதிபர் குடும்பத்துடன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி தற்கொலைக்கு முன் மனைவி விசித்ரா தனது டைரியில் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில்  ‘‘என் கணவர் ராமச்சந்திரன் கோபத்தினால் எங்களுக்கு அதிக பாதிப்புகள் தொடர்ந்து வருகின்றன. அவர் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.  இந்த கடனை வாழ்நாள் முழுவதும் கட்ட முடியாது என நான் சொல்லியும் அவர் காது கொடுத்து கேட்கவே இல்லை.  

நாங்கள் இதை பார்க்க விரும்பாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கிறோம். என் கணவர் இனி அவர் விருப்பம்போல் வாழட்டும்’’ என எழுதியிருந்தார். இது குறித்து  விசாரணை நடத்திய போலீசார்  , ‘‘முதலில் விசித்ரா, தனது இரு மகள்களுடன் முதலில் தற்கொலை செய்துள்ளார். மனைவி, மகள்கள் தற்கொலை செய்தபோது அவர் வீட்டில் ஹாலில் இருந்திருப்பதாக தெரிகிறது. அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது மனைவி, மகள்கள் இறந்துவிட்டது தெரிந்து அவரும் சயனைடு பொடி கலந்த நீரை குடித்து தற்கொலை செய்திருக்கலாம்’’ என தெரிவித்துள்ளனர்.  
 

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (54). இவர் தனது மனைவி விசித்ரா (46), மகள்கள் ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் செல்வபுரம் பகுதியில் மணி ரைஸ் மில் என்ற பெயரில் அரிசி ஆலை நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் இந்த அரிசி ஆலையில் சுமார் 18 கோடி ரூபாய் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கடனில் இருந்து மீண்ட ராமச்சந்திரன், தற்போது அரிசி ஆலை உள்ள அதே வளாகத்தில் மதுபாட்டில்களுக்கு பயன்படுத்தும் மூடி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்களது வீடும் இந்த வளாகத்தில்தான் உள்ளது.

மகள் ஸ்ரீநிதி தனது பட்டப்படிப்புக்காக கனடா வந்துள்ளார். ராமச்சந்திரன் அருகில் உள்ள காலி இடத்தில் வீடு கட்டியதாகவும் கூறப்படுகிறது. ஸ்ரீநிதி சில நாட்களுக்கு முன்பு கனடாவில் இருந்து ஊருக்கு வந்திருந்தார். நேற்று இரவு அவர்கள் நால்வரும் வழக்கம்போல் தூங்கச் சென்றபோது, ராமச்சந்திரன் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் நாளை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீட்டு கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ராமச்சந்திரனின் சகோதரி வழக்கம்போல் அவர்களைப் பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் அறை ஒன்றில் 4 பேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரையும் சோதனை செய்தபோது 4 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும் போலீஸார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நால்வரும் சயனைடு பொடியை கலந்து  குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்