undefined

இன்று மதியத்துக்கு மேல் சென்னை ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் பேருந்துகள் இயங்காது!

 

இன்று ஃபெங்கல் புயல் பிற்பகல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னை ஈசிஆர் சாலையிலும், ஓ.எம்.ஆர். சாலையிலும் பிற்பகலில் மாநகரப் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாநகர அரசு பஸ்கள் இயங்குமா? இல்லையா? என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி புயல் காரணமாக இன்று சென்னை மாநகர பேருந்துகள் வழக்கம் போல இயங்கும். புயல் காரணமாக போக்குவரத்து சேவையில் மாற்றம் இல்லை என்று சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் மட்டும் இன்று மதியத்துக்கு மேல் பேருந்து சேவைகள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் புயல் கரையைக் கடக்கும் போது கிழக்கு கடற்கரைச் சாலை, ஓ.எம்.ஆர். சாலையில் பொதுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

அதே போல் ரயில் சேவையிலும் மாற்றம் என்பது தற்போது வரை செய்யப்படவில்லை. இருப்பினும் காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!