undefined

பகீர்... லாரியும், டபுள் டெக்கர் பேருந்தும் நேருக்கு நேர் மோதி 5 பேர் பலி...15 பேர் படுகாயம்!

 

 உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில்  யமுனா விரைவு சாலையில் தனியார் டபுள் டக்கர் பேருந்தும், லாரியும் எதிர் எதிரே வேகமாக வந்து கொண்டிருந்தன. இரண்டும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர். சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் மாவட்டத்தின் தப்பல் பகுதி வழியாக வாகனங்கள் சென்றபோது நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.பிடிஐ செய்திக்குறிப்பின் படி படுகாயம் அடைந்த பயணி இது குறித்து  டெல்லியின் காஷ்மீர் கேட்டில் இருந்து கிழக்கு உ.பி.யில் உள்ள அசம்கருக்கு தனியார்  பேருந்து சென்று கொண்டிருந்த நிலையில்  கண்ணாடி பொருட்களை ஏற்றிச் சென்ற டிரக்  மோதியதாக தெரிவித்துள்ளார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!