undefined

 பேருந்து மீது லாரி மோதி 24 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்... மெக்சிகோவில் கதறும் மக்கள்!

 
 


மெக்சிகோவில் சுற்றுலா சென்ற இடத்தில் பேருந்து மீது லாரி மோதி 24 பேர் உயிரிழந்தனர். 5 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து ஒரு பேருந்து புறப்பட்டது. சிகுவாகுவா மாகாணம் சியுடாட் நகர் நோக்கிச் சென்ற அந்த பேருந்து 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இருந்தனர். அந்த பேருந்து ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பாலத்தில் சென்றபோது எதிரே ஒரு லாரியும் வேகமாக சென்றது. 

அப்போது திடீரென அந்த லாரியின் டிரைலர் கழன்றது. எனவே எதிரே வந்து கொண்டிருந்த பேருந்து  மீது அந்த லாரியின் டிரைலர் மோதியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து  சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு சென்றதும் பேருந்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்தினர்.

எனினும் இந்த விபத்தில் 24 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த 5 பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு நெடுஞ்சாலை மூடப்பட்டு சில மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!