undefined

  பும்ரா கோஹினூர் வைரத்தை விட  மதிப்பு மிக்கவர்... தினேஷ் கார்த்திக் புகழாரம்!

 

 
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், ஆட்ட நாயகன் விருது விராட் கோஹ்லிக்கும், தொடர் நாயகன் விருது பும்ராவுக்கும் வழங்கப்பட்டது.
இதில் விராட் கோஹ்லி கோகினூர் வைரத்தை போன்று மதிப்பு மிக்கவர் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து பாராட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது பும்ராவை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கோஹினூர் வைரத்தை விட அவர் மதிப்பு மிக்கவர் என பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தக்கூடியவராக பும்ரா இருப்பதாகவும், அழுத்தமான சூழ்நிலையில் கூட சிறப்பாக விளையாடுகிறார் எனவும்   தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். மேலும் புத்திசாலித்தனம் மற்றும் அற்புதம் ஆகிய இரண்டு வார்த்தைகளும் அவருக்கு பொருந்தக்கூடியவை என்று பாராட்டியுள்ளார்.

 சர்வதேச டி20 உலகக்கோப்பை போட்டித் தொடரில்  ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. 17ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் கோப்பையை தட்டிப்பறித்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை பர்படாசிலிருந்து தலைநகர் டெல்லி திரும்பினர்.ரசிகர்கள் இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி காலையிலேயே விருந்தளித்தார்.  

இந்திய அணி வீரர்களுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி ஆகியோரும் உள்ளனர்.  ஜூலை 1ம் தேதி இந்திய அணி நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் பார்படாஸில் வீசிய புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதன்பின் புயல் ஓய்ந்த நிலையில், இந்திய அணி வீரர்களை தனி விமானம் மூலமாக பிசிசிஐ அழைத்து வந்துள்ளது. இந்திய அணி வீரர்களை வருவதை அறிந்த ரசிகர்கள், காலை 5.30 மணி முதலே டெல்லி விமான நிலையத்தில் குவிய தொடங்கினர். இந்திய அணி வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்த போது, ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.  ஹோட்டலுக்கு சென்று தயாரான இந்திய அணி வீரர்கள், பிரதமர் மோடியை சந்திக்க புறப்பட்டனர்.

அப்போது இந்திய அணிக்காக  2 ஸ்டார்களுடன் கூடிய சாம்பியன்ஸ் ஜெர்சியை அணிந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர்  மோடியை அவரது இல்லத்தில்  சந்தித்தனர்.  இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், நட்சத்திர வீரர் விராட் கோலி உட்பட  அனைத்து வீரர்களும் பிரதமரை 11 மணிக்கு சந்தித்தனர். அப்போது இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் மோடி விருந்தளித்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.  1983ம் ஆண்டு உலகக்கோப்பையை முதல்முறையாக வென்ற போதும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இந்திய வீரர்களுக்கு வரவேற்பு கொடுத்து விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!