undefined

புல்லட் ரயில் கட்டுமான பணியின் போது விபரீதம்.. கான்கீரிட் சரிந்து விழுந்து 3 பேர் பலி.. ஒருவர் படுகாயம்!

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மும்பை வரை புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மகாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிலம் முழுமையாக கையகப்படுத்தப்பட்டு போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகிறது. குஜராத்திற்கு உட்பட்ட பகுதியில் இதற்காக அதிக அளவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஆனந்த் மாவட்டத்தில் உள்ள வசாத் என்ற இடத்தில் புல்லட் ரயில் அமைப்பதற்காக கான்கிரீட் கட்டைகள் தயார் செய்யப்பட்டு அடுக்கப்பட்டன. மேலும், அந்த இடத்தில் கான்கிரீட் கட்டைகள் மற்றும் இரும்புகளால் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டது.இந்நிலையில், தற்காலிக கொட்டகை நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. கான்கிரீட் கட்டுக்குள் 4 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். ஒவ்வொரு கான்கிரீட் பகுதியும் கனமானது. எனவே கிரேன் மூலம் அவை அகற்றப்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களில் இருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர். அவர்களின் குடும்பங்களுக்கு  தேசிய விரைவு ரயில் கழகம் தலா 20 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளது. புல்லட் ரயில் 508 கி.மீ தூரத்திற்கு கட்டப்பட்டு வருகிறது. இதில் 352 கிமீ தூரம் குஜராத் எல்லைக்குள் வருகிறது. இந்த திட்டம் ஜப்பானின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமாக புல்லட் ரயில் திட்டம் பார்க்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், வதோதரா அருகே புல்லட் ரயில் கட்டுமான தளத்தில் கிரேன் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!