காதலியை அடித்துக் கொன்ற காட்டில் புதைத்த கொடூரம்.. 10 மாதங்களுக்கு பின் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!
சத்தீஸ்கரில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பெண் ஒருவர் காதலனால் கொல்லப்பட்டு காட்டில் புதைக்கப்பட்டார். 10 மாதங்களுக்கு பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அவர்களது கிராமத்தில் சீமா பாண்டோ என்ற பெண் தனது காதலரான சந்திரிகா பிரசாத் ராஜ்வாடேவுடன் வசித்து வந்தார்.
அவர் திடீரென காணாமல் போனதால், அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக காட்கவான் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சந்திரிகா பிரசாத் மீது போலீசார் சந்தேகம் அடைந்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தகாத உறவு சதேகத்தால் சீமாவை கொலை செய்து, உடலை புதைத்ததை ஒப்புக்கொண்டார்.
மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக மீட்கப்பட்ட எலும்புக்கூட்டை பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இந்த மர்மத்தின் மற்றொரு சம்பவத்தில், தனது மகள் காணவில்லை என்று புகார் அளித்த சீமாவின் தந்தை சோர் லால் பாண்டோவும் கடந்த ஏழு மாதங்களாக காணவில்லை. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!