undefined

 கனடாவிலும் காலை உணவுத் திட்டம்... தமிழக அரசு பெருமிதம்!

 

தமிழகம் முழுவதும் ஸ்டாலின் கனவுத் திட்டமாக  தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகுசிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும். நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகின்றனர்.  
இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்துள்ளது. 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

பேரறிஞர் அண்ணாவின்  பிறந்த நாளான 15.9.2022ல்  மதுரையில் தொடங்கி வைத்தார்.  ஆகஸ்ட் 25ம் தேதி  கலைஞர் பிறந்த திருக்குவளை கிராமத்தில்  தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி; காலை உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் தினமும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி படித்து வருகின்றனர். தெலுங்கானா அரசு  அலுவலர்கள் தமிழகத்துக்கு  வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் அனைத்தையும் நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துகிறது.

தெலுங்கானா மாநிலத்திலும் இந்தக் காலை உணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் எனக்  கூறிச் சென்றனர்.  தெலுங்கானா மாநிலத்தில் தற்போது காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.  இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழ் அடைந்து வருகின்றது. “கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில்  தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியா மட்டுமல்ல  வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழக முதல்வரின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்