undefined

 

ஜூலை 15 முதல் தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு!

 

ஜூலை 15ம் தேதி முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் என்று வெளியான அறிவிப்புக்கு பெற்றோர்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்தபப்ட்டு வருகிறது. அத்துடன் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வர தேவையான அனைத்து செயல்பாடுகள், பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.  

குறிப்பாக அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவு திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இதனை அமல்படுத்த தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை15ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்  கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை 8.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!