மூளை சாவடைந்த பள்ளி மாணவர் உடல் உறுப்புகள் தானம்.. அரசு அதிகாரிகள் நேரில் அஞ்சலி!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நரசிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வாழைக்குலை பகுதியைச் சார்ந்த சரவணன், மகாலட்சுமி இவர்களில் மகன் தருண் 13. அதிராம்பட்டினம் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் தருண் கடந்த 29ஆம் தேதி தனது பள்ளியிலிருந்து தனது உறவுக்கார பெண்ணான கண்ணன் மகள் பவ்யா 10 இருவரும் இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருவரையும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐசியூ பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாணவன் தருண் மூளைச் சாவு ஏற்பட்டு மரணமடைந்தார் இந்நிலையில் மாணவனின் தாயார் மகாலட்சுமி ஒப்புதலோடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ வட்டாட்சியர் சுகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் சிறுவனின் அனைத்து உடல் உறுப்புகளும் தானம் அளிக்கப்பட்டது .
இதில் மாணவர் உடலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அதிமுக அவை தலைவர் கல்யாணஓடை செந்தில் குமார் மாணவனை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி அரசு மரியாதை உடன் அடக்கம் செய்தனர். மேலும் விபத்து குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்...
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!