undefined

 

கலைஞர் இல்லம் திட்டத்தில் புறக்கணிப்பு...  உபதலைவர் ஏஞ்சலின் புகார்!

 
 

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி புறக்கணிக்கப்படுவதாகவும், அதிகாரிகளால் குழப்பம் ஏற்படுத்தபட்டு இருப்பதாகவும் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.அவர் அளித்த மனுவில் "கலைஞர் கனவு இல்லத்திட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி இரண்டு பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்பட்டது . உபதலைவர் ஆகிய நான் கடந்த 19/08/2024 தின மனுவிலும் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனு எண் 9434576 நாள் ஆகஸ்டு 18/2024ல் எம் ஊராட்சியில் கடந்த ஆண்டுகளில் எம் ஊராட்சி மக்களுக்கு பல்வேறு திட்டங்களில் வீடு வழங்காமல் பாதிக்கப்பட்டதையும் சுட்டி காட்டி மேலும் கலைஞர் கனவு இல்ல தீர்மானத்தின் படி மீதி உள்ள 12 நபர்களுக்கு வீடு வழங்கவேண்டும் என்றும் மனு அளித்தேன்.

ஆனால் இன்று வரை அந்த மனு மீது நடவடிக்கை இல்லை .இதற்கு அக்டோபர் 19ம் தேதியன்று மேல்முறையீடும் செய்து உள்ளேன். கடந்த 20/08/2024 மனு எண் 9766252க்கு வட்டார வளர்ச்சி அலுவலம் மூலம் அளித்த பதில் ஆனது 45 நாட்கள் கழித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி கடிதத்தை சுட்டி காட்டி 11 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் இருந்து கலைஞர் கனவு இல்ல பயனாளிகளுக்கு நிர்வாக அனுமதி வரபெற்று உள்ளதாகவும் 5/10/2024 அன்று கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் எனக்கு வரப்பெற்று உள்ளது. 

இந்த ஆணையானது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் தலைவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அவர்களின் செயல்முறை ஆணை எண் அ1/1849/2024 நாள் 3/10/2024 அன்று அளிக்கப்பட்டுள்ளது ஆகும். 3/10/1024 ஆட்சியர் அளித்த ஆணையை 18 நாட்கள் கழித்து தாமதமாக 21/10/2024 தேதியில் பயனாளிகள் 9 பேருக்கு மட்டும் ஆணை அளிக்கப்பட்டுள்ளது. மீதி இருவருக்கு ஆணை வழங்கவில்லை.

எம் ஊராட்சியை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள் எம் ஊராட்சியில் மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் விதமாயும் ந/க.எண் அ5/110/2024 படி சொல்லப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் 11 பேர்க்கு அளித்த ஆணைக்கு அவதூறு அளிக்கும் விதமாய் செயல்பட்டுவருகின்றனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மீதி 2 பேருக்கு பணி ஆணை வழங்க வேண்டும். 

மேலும் 19/8/2024 அன்று கலைஞர் திட்ட வீடு வேண்டி மனு அளித்தவர்களுக்கு 28/9/2024 அன்று பதில் அளித்து அவர்களிடம் உரிய ஆவணங்களை அளிக்க கூறி அந்த அழைப்பாணை தாமதமாக 16,17-10-2024 அன்று கிடைக்க செய்து 5 பேர்கள் 1) பாலசிங் மூர்த்தி ,2)பார்த்திபன், 3,ஜெயா, 4, முத்துலட்சுமி, 5 கனகராஜ் அவர்களை இத்திட்டத்தில் புறக்கணிக்கும் விதமாய் செயல்பட்டு உள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வீடு இவர்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் கடந்த 2017 முதல் 2024 வரை வீடு கட்டி முடிக்காமல் உள்ள பயனாளிகளுக்கு வீடு கட்டி முடித்து விட்டார்களா என ஆய்வு செய்யாமல் முறைகேடாக தம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துஅரசு பணத்தை 7/3/2024 அன்று 4 வது தவணையாண ரூபாய் 40,575 ஜ முறைகேடாக மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வின் பேரில் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் துறை வாரியாக தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் சுமார் 45 பேர்கள் கிராம சபையில் வீடு வேண்டி விண்ணப்பித்து இருக்கும் நிலையிலும் மேற்கண்ட 5 பேர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையிலும் சிவஞானபுரம் கண் தெரியாத நபர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நிலையிலும் மனு மீது முறையாக நடவடிக்கை எடுக்காமலும் கடந்த ஆண்டு pmay திட்டத்தில் எந்த ஆணையும் வழங்காமல் இந்த ஆண்டு இரண்டு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. எம் ஊராட்சி PMAY திட்டத்திலும் 11/9/2024 அன்று இரண்டு பேருக்கு மட்டுமே வழங்கி உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் தங்களால் அளிக்கப்பட்ட 11 பேருக்கு ஆணையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு பேருக்கும் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் மனு அளித்து நிர்வாகத்தால் அவமதிக்கப்பட்ட 5 நபர்களுக்கு வீடு அளித்தும் PMAY திட்ட முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த வருடம் எம் ஊராட்சிக்கு கூடுதல் வீடுகள் PMAY திட்டத்தில் வழங்க வேண்டும்” என சேர்வைக்காரன்மடம் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட ஆட்சியருக்கு தனது கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!