undefined

 செப்டம்பர் 6 முதல்  புத்தகக் கண்காட்சி!

 

 தமிழகம் முழுவதும் சிறார்கள், இளைஞர்களிடையே புத்தக வாசிப்பை அதிகப்படுத்தி இதனை  மக்கள் இயக்கமாக கொண்டு செல்லும் நோக்கில் பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புத்தக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வாசிப்பை ஊக்குவித்து வருகின்றன. இந்த வரிசையில் கடந்த ஆண்டு முதல் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர் சங்கம் இணைந்து புத்தக கண்காட்சியை நடத்தி வருகின்றன.


அந்த வகையில் நடப்பாண்டிற்கான புத்தக கண்காட்சி  செப்டம்பர் மாதம் 6ம் தேதி முதல் 16ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தக கண்காட்சியில்  புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பாக ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட புத்தக அங்காடிகள் அமைக்கப்பட உள்ளது.

தினமும்  மாலை வேளையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் பேச்சு போட்டிகள், நட்சத்திர பேச்சாளர்களின் உரை மற்றும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன. மேலும் இப்புத்தக கண்காட்சியில் சிறார்கள், மாணவ மாணவியரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.  புத்தகக் கண்காட்சியில்  குழந்தைகளுக்கான கதை சொல்லல், பயிலரங்கம் போன்ற நிகழ்வுகளைக் கொண்ட சிறார் அரங்கமும் அமைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை