undefined

பத்திரம் மக்களே.. இந்த மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்... பாலச்சந்திரன் பேட்டி!

 
தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  வடகிழக்கு பருவ மழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாக பெய்துள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக  சென்னை பெருங்குடியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் வட தமிழகம் மற்றும் தெற்கு அந்தமான் கடற்கரைக்கு அருகில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நடந்து செல்ல கூடும். இதன் காரணமாக அடுத்த வரும் 4 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். 

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. இன்று நவம்பர் 13ம் தேதி சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 14ம் தேதி கடலோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி ஒட்டி உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவம்பர் 15ம் தேதி தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு  35 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழை அளவு 256 மில்லி மீட்டர் இந்த காலகட்டத்தின் இயல்பு அளவு 259 மில்லி மீட்டர் இது இயல்பை விட ஒரு சதவீதம் குறைவு என்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு இல்லை. அது  ஏற்கனவே கடற்கரை பகுதியில் தான் உள்ளது. கடந்த 7,8,9 தேதியில் வங்கக்கடலில் உள்ள வடபகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையே வடக்கு பகுதியில் மேற்கு திசை காட்டும் தென்பகுதிக்கு கிழக்கு திசை காற்று சென்றுள்ளது. இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி மெதுவாக உருவாகியது” என்று கூறினார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!