undefined

 பத்திரம் மக்களே.. இன்று காலை 10 மணி வரை இந்த 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

இன்று காலை 10 மணி வரை இந்த 13 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரம் மக்களே... மழைக்காலங்களில் வயதானவர்களையும், கர்ப்பிணிகள், சிறியவர்களையும் தனியே வெளியே அனுப்பாதீங்க. இன்று அலுவலகத்திற்கு கிளம்பிச் செல்பவர்கள் மறக்காம குடையோட கிளம்புங்க.

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (அதாவது) இன்று காலை 10 மணிக்குள்ளாக மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!